Skip to main content

கமல் பேச்சை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம்! அன்புமணி பகீர் பேட்டி

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அவருடைய மனைவி சவுமியா மற்றும் பாமக மாநில தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் பழனி முருகர் கோவிலுக்கு வந்தனர். அவர்களை மாவட்ட பாமக நிர்வாகிகள் வரவேற்று ரோப்கார் மூலம் மலைக்கு அழைத்து சென்றனர். 

 

anbumani


அதன் பின் அன்புமணி அவரது மனைவி சவுமியா மற்றும் ஜி.கே.மணி ஆகியோர் வி.ஐ.பி. வரிசையில் சென்று முருகனை தரிசித்தனர். அவர்களுக்கு கோவில் அர்ச்சகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
 

அதன் பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், “இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல்காந்தி என ஸ்டாலின் சொல்லி வந்தார். அப்படி இருக்கும் போது திடீரென தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவுடன் ஒரு மணி நேரம் பேசி இருக்கிறார். அதை பார்க்கும் போது ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்துவிட்டது. காங்கிரஸ் ஆட்சிக்கு வராது என்ற எண்ணத்தில் மூன்றாவது அணிக்கு தாவி பதவியை பிடிக்க நினைக்கிறார்.


கோதாவரி காவேரி இணைப்பு திட்டத்தை மத்திய அரசு ரூ. 60 கோடியில் செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் தமிழகத்திற்கு 200 டிஏம்சி தண்ணீர் கிடைக்கும். சென்னை முதல் மதுரை வரையும் உள்ள மக்களுக்கு தண்ணீர் கிடைக்கும். நடிகர் கமல் பேச்சை சீரியசாக எடுத்து கொள்ள வேண்டாம் அவர் அந்த மாதிரி தான் பேசுவார்.

 

வேதாந்த நிறுவனத்திற்கு காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோகார்பன் எடுக்க சுற்றுச் சூழல் வாரியம்  அனுமதி கொடுத்துள்ளது  இது ஆபத்தான திட்டம். அந்த அனுமதியை மத்திய அரசு நிறுத்த வேண்டும் டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க சட்டம் கொண்டு வர வேண்டும். இதற்காக போராட தயாராக உள்ளோம் அதுபோல் அதிமுகவுடனான கூட்டணி வரும் உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும்” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்