திருச்சி லலிதா ஜூவல்லரி கடையில் கடந்த 2- ஆம் தேதி அதிகாலை நகைக்கொள்ளையில் 13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்ததில் முருகன் மூளையாக செயல்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவனுடைய கூட்டாளிகளை தொடர்ச்சியான கைதுக்கு, பிறகு அவன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளான்.
இந்த நிலையில் பெங்களூரில் இருந்த முருகனை திருச்சிக்கு அழைத்து வந்து நகைகளை மீட்டு, பெரம்பலூரில் வைத்து அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த வருடம் ஆரம்பத்தில் ஜனவரி மாதம் உப்பியபுரத்தில் வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி, அதை அடுத்து கடந்த 18- ஆம் தேதி மண்ணச்சநல்லூர் மத்திய கூட்டுறவு வங்கி கொள்ளையடிக்க முயற்சி, கடந்த 21- ஆம் தேதி மண்ணச்சநல்லூரில் உள்ள பஞ்சாப் வங்கியில் கடன் வழங்கும் நிதியை கொள்ளையடிக்க முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த வங்கிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லாம் பலமாக இருந்தாதாலும், லாக்கர்களை உடைக்க முடியாததாலும் வங்கிகளை கொள்ளையடிக்க முடியவில்லை. இதையெல்லாம் பாடமாக வைத்து தான், பஞ்சாப் நேஷனல் வங்கியில் கரெக்டாக அடித்து விட்டோம்.
எல்லா வங்கி கொள்ளை முயற்சியும் தொடர் விடுறை இருப்பதை கணக்கில் வைத்து தான்.. கொள்ளையடிக்க திட்டமிட்டோம். முதல் 3 வங்கியில் முயற்சி தோல்வி அடைந்தது. 4- வது இந்த வங்கியில் மாடியில் துளையிட்டுதான் உள்ளே இறங்கி கேஸ் வெல்டிங்கை பயன்படுத்தி கொள்ளையடித்தோம். மொத்தம் 500 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே லாக்கரில் மட்டும் 100 பவுன் நகைகள் இருந்தது. எங்களுக்கு வெல்டிங் பண்ண ராதாகிருஷணன், நான், சுரேஷ், மற்றும் கணேஷன் ஆகியோர் பண்ணினோம் என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறார்.
இந்த நிலையில் திருச்சி எஸ்.பி ஜியா உல் ஹக் பத்திரிகையாளர்களிடம் பேசும்போது.. லலிதா ஜூவல்லரி கொள்ளை வழக்கில் தொடர்புடைய முருகன், சுரேசுக்கு வங்கி கொள்ளை வழக்கிலும் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முருகன், சுரேஷ், வாடிப்பட்டி கணேஷ், தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிபட்ட தஞ்சாவூர் ராதாகிருஷ்ணன் வெல்டிங் தொழில் செய்து வந்துள்ளார். ராதாகிருஷ்ணனை திண்டுக்கல் அருகே சுற்றி வளைத்து பிடித்துள்ளோம் என்றார்.