அடுத்த மாதம் வினாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் வினாயகர் சதுர்த்திக்கு ஒவ்வொரு ஊரிலும் வினாயகர் சிலைகள் முக்கிய இடங்களில் வைக்கப்பட்டு பிறகு அச்சிலைகள் நீர் நிலைகளில் விடப்படும். முன்பெல்லாம் களிமண் மூலம் சிலைகள் செய்யப்பட்டது. ஆனால் சமீப ஆண்டுகளாக பிளாஸ்டோ பாரீஸ் மூலம் மற்றும் விஷத்தன்மை வாய்ந்த ரசாயண கலவைப் பூச்சு என வினாயகர் சிலைகளை உருவாக்கப்படுகிறது. இவற்றை நீர் நிலைகளில் கொண்டு போய் போடுவதால் தண்ணீர் கெட்டுப் போய் நீர் விஷத்தன்மையாகிறது. இது மக்களுக்கும் அதை குடிக்கும் உயிரினங்களுக்கும் நோய் நொடி ஏற்படுகிறது. இதனால் இந்த வருடம் வினாயகர் சிலைகள் எப்படி இருக்க வேண்டும். சிலை அதிக நாள் அந்த இடத்தில் வைத்திருக்க கூடாது. மேலும் சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளிலும் அனுமதி பெற வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது அரசு. இதற்கு எதிராகத் தான் இன்று ஈரோடு மாவட்ட அட்சியர் பிரபாகரிடம் இந்து முன்னணியினர் மனு கொடுத்தனர் அவர்கள் கூறும்போது முன்பு இருந்தது போலவே சிலை வைக்க அனுமதிக்க வேண்டும். புதிய விதியை நடைமுறைபடுத்தக் கூடாது என்றனர்.