2,465 கோடி ரூபாய் மதிப்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது தொடங்கி வைத்துள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் வடநெம்மேலி பகுதியில் 2,465 கோடி ரூபாய் மதிப்பில் நாள் ஒன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக துவங்கப்பட்டது. தற்போது பணிகள் முடிவுபெற்ற நிலையில் தற்போது இந்த சுத்திகரிப்பு ஆலையை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார்.
இந்த பகுதியில் சுத்திகரிக்கப்படும் குடிநீரானது தாம்பரம் மாநகராட்சி பகுதி, வேளச்சேரி, பல்லாவரம் ஆகிய பகுதிகளுக்கு விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடல்நீரை குடிநீராக்கும் ஆலையைத் திறந்து வைத்ததோடு மட்டுமல்லாது 2,058 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களுக்கான அடிக்கல்களையும் தமிழக முதல்வர் நாட்டியுள்ளார். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவ்ராஜ் மீனா, அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு, தா.மோ.அன்பரசன் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.