Published on 11/10/2018 | Edited on 11/10/2018
திமுக பாஜகவுடன் மறைமுக கூட்டணி வைத்துள்ளது என மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம் அவரக்குறிச்சி தொகுதிக்கு உட்பட பல கிராமங்களுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்த மக்களவை துணைத்தலைவர் தம்பிதுரை இறுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,
திமுக மறைமுகமாக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியை ஸ்டாலின் பிரதமர் வேட்பளராக ஏற்கவில்லை. ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என்று எந்த மேடையிலும் சொல்லவில்லை சொல்லவும் மாட்டார். காரணம் திமுக பாஜகவுடன் மறைமுக தொடர்பு வைத்துள்ளது என்றார்.