Published on 24/06/2019 | Edited on 24/06/2019
தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனைப் பெரும் பிரச்சனையாக மாறியுள்ள நிலையில் இது குறித்து விவாதிக்க வேண்டுமென மக்களவையில் திமுக நோட்டீஸ் கொடுத்துள்ளது.
![dmk submitted notice in loksabha](http://image.nakkheeran.in/cdn/farfuture/Vfa-x1zAcjJMO6JD0ImDxbZkZniv2dlyUeVjTmeALrs/1561351574/sites/default/files/inline-images/jhkj.jpg)
வறட்சியின் கோரதாண்டவத்தினால் நிலத்தடி நீராதாரம் கிடு கிடுவென சரிந்து கீழேப்போய்விட்டது. இதனால் தண்ணீருக்கு மக்கள் அல்லல்படும் அவநிலை ஏற்பட்டிருக்கிறது. ஏரிகள், ஆறுகள் வறண்டுவிட்ட நிலையில் தண்ணீர் பஞ்சம் மிகப்பெரிய பிரச்சனையாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உருவெடுத்துள்ளது. இந்நிலையில் இது குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டும் என தொல். திருமாவளவன் கூறினார். இதனையடுத்து தற்போது திமுக சார்பில் இது குறித்து விவாதிக்க வேண்டும் என திமுக மக்களவைக்கு குழு தலைவர் டி.ஆர்.பாலு நோட்டீஸ் ஒன்றை மக்களவையில் தாக்கல் செய்துள்ளார்.