தமிழக பாஜக தலைமை பதவி காலியாக உள்ளது. இந்த பதவியை பிடிக்க கட்சிக்குள் 6,7 பேர் கடும் போட்டியில் உள்ளனர். குறிப்பாக எச்.ராஜா, சிபி ராதாகிருஷ்ணன், வானதி சீனிவாசன், பொன். ராதாகிருஷ்ணன், ஆகியோர் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. இதில் பொன். ராதாகிருஷ்ணனுக்கும், எச்.ராஜாவுக்கும்தான் டஃப் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவர்கள் 4 பேருமே சீனியர்கள், 4 பேருமே சர்ச்சையை கிளப்புபவர்கள். 4 பேருமே பாஜக தலைமைக்கு நெருக்கடியை தருபவர்கள் என்பதாலேயே இவர்கள் 4 பேரின் பெயர்களும் அடிப்படுகிறது.
சிபி ராதாகிருஷ்ணன், வானதியை பொறுத்தவரை, கொங்கு மண்டலத்தை சேர்ந்தவர்கள். கொங்குவின் வாக்குகளை மொத்தமாகவே அள்ளும் அளவுக்கு அந்த பகுதிகளில் வலிமையானவர்கள். அதனால் கொங்கு என்பதை மனதில் வைத்து பாஜக தலைமை யோசித்தால், சிபி ராதாகிருஷ்ணனுக்கும், வானதிக்கும் ஒரே மாதிரியான முடிவைதான் எடுத்து வைக்கும்.
எச்.ராஜா
ஆனால் ஏற்கனவே தமிழக பாஜகவுக்கு ஒரு பெண் தலைவராகி விட்டதால், அடுத்து ஒரு பெண்ணை பாஜக தலைவராக்குமா என்பது சந்தேகம்தான். எனவே வாய்ப்பு சிபிஆருக்கு நிறைய உள்ளது. அதேபோல, எச்.ராஜாவை பொறுத்தவரை, தேசிய அளவில் பொறுப்பை வகித்தாலும், இதுவரை மாநில தலைவர் ஆனது இல்லை.
திமுக
போன முறை தமிழிசை தலைவராக அறிவிக்கப்பட்ட நேரத்தில் எச்.ராஜாவும் அப்போது போட்டியில் இருந்தார். எனவே இந்த முறை தலைவர் பதவியை கைப்பற்றி விட அவர் முனைப்பு காட்டி வருகிறார். இவர் பாஜக தலைவரானால், திமுகவை எளிதாக சமாளிப்பார், பாஜகவுக்கு எதிரான விமர்சனங்களை இவர் திறமையாக சமாளிப்பார் என்று நம்பப்படுகிறது.
இந்துத்துவா
அதனால், சாதிய ரீதியாக, அதாவது கொங்கு வாக்குகளை அள்ள வேண்டும் என்று முடிவெடுத்தால், சிபிஆர் பெயரே முன்னிறுத்தப்படும். இந்துத்துவா அடிப்படையில் என்று முடிவெடுத்தால் எச்.ராஜா பெயர் முன்னிறுத்தப்படும். இதுதான் பாஜக தலைமையின் இப்போதைய கருத்துணர்வாக தெரிகிறது. அந்த வகையில் எச்.ராஜா ரேஸில் கொஞ்சம் முந்தி உள்ளதாக சொல்லப்படுகிறது.