Published on 10/08/2020 | Edited on 10/08/2020
![dmk Stalin's question](http://image.nakkheeran.in/cdn/farfuture/Y1Hq-g1w614Duzsh2rbNPhwT1j0awtBuwcnMWHQzFSk/1597055454/sites/default/files/inline-images/asdg_1.jpg)
"நீங்கள் இந்தியரா?" என திமுக எம்.பி. கனிமொழியிடம் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கேட்ட கேள்வியால், அதிர்ச்சி அடைந்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கனிமொழி.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று விமான நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீஸ், என்னிடம் இந்தியில் எதையோ சொன்னார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்று விமான நிலையத்திற்கு சென்றேன். அங்கிருந்த மத்திய தொழிலக பாதுகாப்பு படையை சேர்ந்த பெண் போலீஸ், என்னிடம் இந்தியில் எதையோ சொன்னார்.
அதற்கு நான், எனக்கு இந்தி தெரியாது. ஆங்கிலம் அல்லது தமிழில் பேசுங்கள் என்றேன். உடனே அவர், நீங்கள் இந்தியரா? என கேட்டார். உடனே நான் திடுக்கிட்டேன். இந்தி தெரிந்தால் போதும் அது இந்தியராக இருப்பதற்கு சமமா என்பதை அறிய விரும்புகிறேன் என ட்விட்டரில் பதிவு செய்துள்ளார் கனிமொழி எம்.பி. !
![dmk Stalin's question](http://image.nakkheeran.in/cdn/farfuture/d0gdSCvzuvZF5LLw8Anh4H377oqDvZ5JH5oG05MaInw/1597055510/sites/default/files/inline-images/zAdfada_0.jpg)
இது தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி, “இந்தியாவில் இந்திதான் இந்தியர்கள் என்பதற்கு அளவுகோலா?” என ட்விட்டர் பதிவின் மூலம் கேள்வி எழுப்பியுள்ளார்.