திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி 5 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாம.க.வேட்பாளர் ஜோதிமுத்துவை தோற்கடித்தார். அதுபோல் தன்னை எதிர்த்து போட்டியிட்ட டிடிவி அணியை சேர்ந்த ஜோதிமுருகன் உள்பட 20 பேரும் டெபாசிட் கூட வாங்கவில்லை. அந்த அளவிற்கு தமிழகத்திலேயே 5 லட்சத்து 38 ஆயிரத்து 972 ஓட்டுகள் கூடுதலாக வாங்கி முதல்இடத்தை பிடித்த பெருமை வேலுச்சாமியை சாரும், அந்த அளவிற்கு பெரும்வாரியான ஓட்டு வித்தியாசத்தில் வாக்காள மக்கள் வேலுச்சாமியை வெற்றி பெற வைத்தனர்.
அதன் அடிப்படையில் திமுக தலைவர் ஸ்டாலினிடமும் ஆசிபெற்று டெல்லி சென்ற வேலுச்சாமி எம்.பி . பதவியை ஏற்றுக் கொண்டு திண்டுக்கலுக்கு வந்தவர் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி சொல்வதற்காக தொகுதியில் களம் இறங்கி வருகிறார்.
முதன்முதலில் திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட திண்டுக்கல் ஒன்றிய பகுதிகளில் உள்ள பாலகிருஷ்ணாபுரம்,உழவர் சந்தை, தோட்டனூத்து, நல்லமனார்கோட்டை மற்றும் சிறுமலை, அண்ணாநகர், பழையூர், புதூர் உள்பட சில ஊர்களுக்கு நன்றி சொல்ல சென்ற எம்.பி.வேலுச்சாமியை ஊர் மக்கள் வரவேற்று ஆரத்தி எடுத்தும், மாலை, சால்வை போட்டும் வரவேற்றனர்.
அதைகண்டு எம்.பி.வேலுச்சாமியும், வாக்காள மக்களுக்கு நன்றி தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல் இனிப்புகள் வழங்கியும், மக்களுக்கு வாக்குறுதிகளையும் கூடிய விரவில் நிறைவேற்றி கொடுக்கிறேன் என உத்திரவாதமும் கொடுத்தார். அதோடு வாக்காள மக்களின் கோரிக்கையை ஏற்று சங்கனம் பட்டியலில் மரக் கன்றுகளை நட்டார். அதை தொடர்ந்து ஒன்றிய பகுதிகளில் நன்றி சொல்லியும் வருகிறார். அவருடன் நத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஆண்டி அம்பலம் மற்றும் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் உள்பட ஒன்றிய பொறுப்பாளர்கள் பலரும் உடன் இருந்தனர்.