
கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அடுத்த குமாரகுடி கிராமத்தின் வளைவில் வீராணம் ஏரியின் வடிகால் வாய்காலின் வளைவில் 100 ஆண்டுகளை கடந்த பழைமை வாய்ந்த பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் வழியாக சென்னை - கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.
இந்த நிலையில் வியாழக்கிழமை(3.4.2025)) சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி தமிழக அரசின் விரைவு சொகுசு பேருந்து ஒன்று 20 பயணிகளுடன் சேத்தியாதோப்பு அடுத்த குமாரகுடி பாலத்தின் அருகே வரும்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்திற்கு வெளியே வாய்க்காலின் முகப்பில் தொங்கியவாறு ஓட்டுநர் பேருந்தை பத்திரமாக நிறுத்தியுள்ளார். இதில் இருந்த பயணிகள் அலறி அடித்து கூச்சல் போட்டுக்கொண்டு பத்திரமாக இறங்கியுள்ளனர். இறங்கிய பயணிகளை மாற்று அரசு பேருந்துகளில் அனுப்பியுள்ளனர். இதனால் பெரும் விபத்து தவிர்கப்பட்டது.
குமாரகுடி வளைவில் உள்ள குறுகிய பாலம் தொடர்ந்து விபத்தை ஏற்படுத்தும் பாலமாக உள்ளது. இந்த பாலத்தை அகற்றிவிட்டு பெரிய அளவில் புதிய பாலம் அமைக்க வேண்டும் என தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் அரசு சொகுசு பேருந்து விபத்தில் சிக்கியுள்ளது. பேருந்து தவறி வாய்காலில் இறங்கினால் 20 பள்ளத்தின் வாய்காலில் பேருந்து முழ்கி இருக்கும். இதுவரை இந்த பாலத்தில் 20-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடைபெற்று பலர் உயிர் இழந்துள்ளதாக அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.