Skip to main content

தேனி மாவட்டத்திற்கு தி.மு.க. பொறுப்பாளர்கள் நியமனம்!

Published on 01/10/2020 | Edited on 01/10/2020

 

DMK GENERAL SECRETARY DURAIMURUGAN THENI DISTRICT NEW LEADERS

 

 

தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளர்கள் மற்றும் தேனி மாவட்டத்திற்கான தி.மு.க. பொறுப்பாளர்களை நியமித்து, அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவிட்டுள்ளார்.

 

தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தி.மு.க.வின் நிர்வாக வசதிக்காக தேனி மாவட்டம் வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக தங்க. தமிழ்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளராக கம்பம் என். ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தி.மு.க.கொள்கை பரப்பு செயலாளர்களாக திண்டுக்கல் ஐ.லியோனியும், சபாபதி மோகனும் நியமிக்கப்பட்டுள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இதுதான் பார்சியாலிட்டி; ஆணையம் தான் கண்டுபிடிக்க வேண்டும்” - துரைமுருகன் ஆவேசம்

Published on 20/09/2023 | Edited on 20/09/2023

 

 “This is partiality; The commission should find out'' - Duraimurugan is obsessed

 

காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவேரி மேலாண்மை வாரியம், தமிழகத்திற்கு காவிரியில் 15 நாட்களுக்கு 5,000 கன அடி நீர் திறக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த நிலையிலும், தற்பொழுது வரை நீர் திறக்கப்படவில்லை. நேற்று முன்தினம் காவிரி மேலாண்மைக் கூட்டம் நடைபெற்ற நிலையில், அன்று மாலையே காவிரி ஒழுங்காற்றுக் குழுத் தலைவர் வினித் குப்தா, காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே. ஹல்தர் ஆகியோர் மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

 

தொடர்ந்து மத்திய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தபடி டெல்லியில் நேற்று  சந்தித்தனர். காவிரி விவகாரம் தொடர்பாகத் தமிழக அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கும் நிலையில், வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்களுடன் அமைச்சர் துரைமுருகன் ஆலோசனையில்  உள்ளார்.

 

 “This is partiality; The commission should find out'' - Duraimurugan is obsessed

 

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் துரைமுருகன், “தண்ணீர் இருக்கு என்கிறோம் நாங்கள். பல பல டேம்களில் தேக்கி வைத்துள்ளார்கள் என்று சொல்கிறோம் நாங்கள். இல்லை என்று சொல்கிறார்கள் அவர்கள். ஆனால் தண்ணீர் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடித்துச் சொல்லக் கூடிய அதிகாரம் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கும், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவுக்கும்தான் இருக்கிறது. இந்த இரு அமைப்புகளும் அவர்களுடைய ஆட்களை வைத்து உறுதி செய்ய வேண்டும். 13ம் தேதி 12,500 கன அடி நீர் தமிழ்நாட்டுக்கு தரலாம் என்று சொன்னார்கள். ஆனால் அன்று மாலையே காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு 5,000 கன அடி என்று சொன்னார்கள். நான் கேட்பது, காவிரி ஒழுங்காற்றுக் குழு முறையாக நடக்கிறதா அல்லது கர்நாடகாவிற்கு அனுசரணையாக நடக்கிறதா? என்று அமைச்சரிடம் கேட்டேன். ஏன் உங்களிடம் கேட்கிறேன் என்றால் நீங்கள் மத்திய அமைச்சர் இதை நீங்களே கேட்கவில்லை என்றால் எப்படி என்றேன்.

 

காவிரி மேலாண்மை ஆணையத்தின் சேர்மனும் வந்திருந்தார். அவரிடம் கேட்டேன், எப்படி டூயல் ரோல் எடுக்கறீங்க.13 ஆம் தேதி ஒரு உத்தரவு கொடுக்குறீங்க. அப்புறம் வேற உத்தரவு கொடுக்குறீங்க. கர்நாடக சார்பில் ஒருவர் சொன்னாராம் எங்களுக்கு தண்ணீர் குடிக்க தேவைப்படுகிறது என்று, எங்களுக்கு மட்டும் என்ன வாரி கொட்டவா தேவைப்படுகிறது. எங்களுக்கும் தான் குடிக்கத் தேவைப்படுகிறது. இதையெல்லாம் ஒழுங்காற்றுக் குழுவில் இருக்கும் மெம்பரே சொல்லக்கூடாது. இதுதான் பார்சியாலிட்டி” என்றார்.

 

 

Next Story

தங்கதமிழ்ச்செல்வனின் தென்னந்தோப்பை சேதப்படுத்திய அரிக்கொம்பன்

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

Arikkompan who damaged the coconut grove of Thanga Tamilchelvan

 

கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கேரளாவில் இருந்து தமிழக எல்லையான குமுளி வழியாக கம்பத்திற்குள் நுழைந்த அரிக்கொம்பன் என்ற அரிசி கொம்பன் யானை, நகரில் பல பகுதிகளுக்குள் நுழைந்து மக்களை விரட்டியதில் மக்கள் பதறியடித்துக் கொண்டு வீடுகளுக்குள் புகுந்து தஞ்சம் அடைந்தனர்.

 

இந்த விஷயம் வனத்துறை மற்றும் போலீசாருக்கு தெரியவே அரிக்கொம்பனை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கினார்கள். ஆனால் அரிக்கொம்பன் கம்பம் அருகே உள்ள சுருளிப்பட்டி வழியாக சென்று சுருளி மலைப்பகுதிக்குள் தஞ்சமடைந்தது. அதைத் தொடர்ந்து அரிக்கொம்பனை பிடிக்க மூன்று கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 

அப்படியிருந்தும் அரிக்கொம்பனை பிடிக்க முடியவில்லை. ஆனால் சுருளிமலை அடிவாரம் பகுதியில் முகாமிட்டுள்ள அரிக்கொம்பன் அப்பகுதியில் உள்ள முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான தங்கதமிழ்ச்செல்வனுக்கு சொந்தமான தென்னந்தோப்பிற்குள் நுழைந்து அங்கிருந்த 300 தென்னை மரங்களை வேரோடு சாய்த்து அழித்திருக்கிறது.

 

nn

 

அதை கேள்விப்பட்ட தங்கதமிழ்செல்வன் மனம் நொந்துபோய்விட்டார். இரண்டு வருடங்களாக தென்னங்கன்றுகளை காட்டுப்பன்றியிடம் இருந்து காப்பாற்றி அதை வளர்த்து மரமாக்கி இன்னும் சில மாதங்களில் காய் கோர்க்கும் நேரத்தில் இப்படி தென்னை மரங்களை அக்கொம்பன் சேதப்படுத்திவிட்டது. ஒரு சில தோட்டங்களுக்குள் புகுந்து விவசாய நிலங்களையும் சேதப்படுத்திக் கொண்டு மலைப்பகுதிக்குள் அரிக்கொம்பன் தஞ்சமடைந்து வருகிறதே தவிர இன்னும் வனத்துறையினர் பிடிக்க முடியவில்லை.