நீட் தேர்வுக்கு எதிராக இன்று (ஆகஸ்ட் 20) உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளதாக திமுக சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த உண்ணாவிரத போராட்டமானது திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது. மதுரை மாவட்டம் நீங்கலாகத் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் இந்த உண்ணாவிரத ஆர்ப்பாட்டம் இன்று நடைபெறவுள்ளது.
திமுக இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவ அணி செயலாளர்கள் சென்னையில் நடக்கின்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்கவுள்ளனர். அதேபோல, அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறவுள்ளது” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உண்ணாவிரத போராட்டத்தை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று தொடங்கி வைக்கிறார். காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொள்கின்றனர். மேலும் காரைக்காலிலும் நடைபெற உள்ளது.
அதே சமயம் மதுரையில் மட்டும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் வரும் 23 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரையில் அதிமுக சார்பில் மாநாடு நடைபெற உள்ள நிலையில் திமுக நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான தேதி மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.