வருகிற பாராளுமன்ற தேர்தலில் தங்கள் கட்சிக்கு சீட் ஒதுக்க வேண்டும் என தி.மு.க. மற்றும் அதிமுகவிடம் தூதுபோனது கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி. நீண்ட காலமாக தி.மு.க.வோடு தோழமையாக இருந்தாலும் கூட்டணியில் சீட் பெற அ.தி.மு.க. இரண்டாம் கட்ட தலைவர்களுடன் ரகசிய பேச்சுவார்த்தையிலும் கொ.ம.தே.க. ஈடுபட்டது.
இறுதியாக தி.மு.க. அணியில் தன்னை நிலைநிறுத்தி உள்ளதாக அக்கட்சியின் நிர்வாகிகள் தெரிவிக்கிறார்கள். திமுக கூட்டணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியை தி.மு.க. ஒதுக்கியுள்ளதாகவும், அந்த தொகுதியில் அக்கட்சியின் பொதுச் செயலாளரான ஈஸ்வரன் போட்டியிடுகிறார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் அவர் தனி சின்னத்தில் போட்டியிட வில்லை தி.மு.க சின்னமான உதயசூரியன் சின்னத்தில் தான் ஈஸ்வரன் போட்டியிடவுள்ளார் என திமுக மூத்த நிர்வாகிகள் கூறியிருக்கிறார்கள். ஆக, கொங்குநாடு மக்கள் கட்சி இறுதியாக திமுக கூட்டணியில் ஒரு தொகுதியில் போட்டியிடுவது பெரும்பாலும் உறுதியாகி விட்டது.