Skip to main content

ஜனவரி 31-க்குள் இடப்பங்கீட்டை முடிவு செய்ய மாவட்டச் செயலாளர்களுக்கு திமுக உத்தரவு!

Published on 29/01/2022 | Edited on 29/01/2022

 

c

 

தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியுள்ள நிலையில், அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கூட்டணிக் கட்சிகளுடன் இடப்பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றன.

 

அந்த வகையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் ஆகியோர் இட பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினர்.  

 

அதேபோல் திமுகவுடன் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், தவாக, மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அண்ணா அறிவாலயத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மேலும் மாவட்டங்களில் கூட்டணி கட்சிகளுக்கு உரிய இடங்களை திமுக மாவட்ட செயலாளர்கள் வரும் 31ம் தேதிக்குள் இறுதி செய்ய வேண்டும் என்று திமுக தலைமை அறிவுறுத்தியுள்ளது. இதனால் இன்னும் இரண்டு நாட்களில் திமுக வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சார்ந்த செய்திகள்