Skip to main content

திமுக, அமமுக கூட்டுவைத்துள்ளது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது- இபிஎஸ்

Published on 08/05/2019 | Edited on 08/05/2019

நேற்று தேனி க.விலக்கில் செய்தியளர்களை சந்தித்த அமமுகவின் முக்கிய நிர்வாகியான தங்கத்தமிழ்செல்வன் பேசுகையில்,

 

இந்த தேர்தலை அதிமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்பும் தேர்தலாக பார்க்கிறோம். திமுகவும் நாங்களும் சேர்ந்தால்தான் இந்த ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப முடியும் என கூறியிருந்தார்.

 

eps

 

இந்நிலையில் இன்று தூத்துக்குடி விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி,

 

திமுகவுடன், அமமுக கூட்டு வைத்துள்ளது தங்கத்தமிழ்செல்வன் மூலம்  வெட்ட வெளிச்சமாக வெளிப்பட்டுள்ளது.  தமிழகத்தில் ஜூன் மாதத்தில் 10 தொழிற்சாலைகள் தொடங்க அடிக்கல் நாட்டப்பட உள்ளது. புதிய தொழிற்சாலைகள் மூலம் தமிழகத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். திறமையின் அடிப்படையில்தான் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகிறனர்.

 

தோல்வி பயத்தால்தான் தேர்தல் ஆணைய நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றார்கள். மே 23 தேர்தல் முடிவுக்கு பிறகு முக.ஸ்டாலினின் முதல்வர் கனவு பலிக்காது எனக்கூறினார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்