Published on 01/03/2021 | Edited on 01/03/2021

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேதியை இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில், தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க.வின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் டி.ஆர்.பாலு தலைமையில், ஆர்.எஸ்.பாரதி, ஐ.பெரியசாமி, பொன்முடி உள்ளிட்ட குழுவினர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியுடனும், அதைத் தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சியுடனும் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில் தற்போது இரண்டு கட்சிகளுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. அதன்படி ஐயூஎம்எல் கட்சிக்கு 3 இடங்களும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 இடங்களையும் திமுக ஒதுக்கியுள்ளது.