வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 9, 018 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
வேலூர் மக்களவை தேர்தல் கடந்த 5-ந் தேதி நடைபெற்றது. அ.தி.மு.க. சார்பில் ஏ.சி.சண்முகமும், தி.மு.க. சார்பில் கதிர்ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் தீபலட்சுமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். தேர்தலன்று பதிவான வாக்குகள் ராணிப்பேட்டை பொறியியல் கல்லூரியில் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டது. பகல் 2 .30 மணிக்கு மேல் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது.
திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 4,85,340 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம் 4,77,199 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்துள்ளார்.
நாம் தமிழர் கட்சி வே ட்பாளர் 26, 995 வாக்குகள் பெற்றுள்ளார்.
திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதையடுத்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் கூடி பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.