சிதம்பரம் அண்ணாமலைப்பல்கலைகழக தொலைதூர கல்வி மையத்தில் 2018-19-கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைகான விண்ணப்பம் வழங்கும் நிகழ்ச்சி தொலைதூர கல்வி மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணைவேந்தர் பேரா.முருகேசன் கலந்து கொண்டு மாணவர்களுக்கு விண்ணப்பத்தை வழங்கி தொடக்கிவைத்தார்.
பின்னர் இதுகுறித்து செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில்,
கடந்த ஆண்டுபோல் இந்த ஆண்டும் மாணவர்கள் சேர்க்கைக்கு பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சிறப்பாக பணியாற்றுவார்கள். இந்த ஆண்டு 1 லட்சத்திற்கு மேல் மாணவர்கள் சேர்க்கைக்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். தொலைதூரகல்வியில் அறிவியல், கலை, கணினி, இசை உள்ளிட்ட 259 படிப்புகளை மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு யோக பட்டமேற்படிப்பு, கணினி பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய படிப்புகள் உட்பட 25 புதிய படிப்புகள் தொடங்கபட உள்ளன. இதனை மாணவர்கள் பயன்படுத்திகொண்டு நல்லமுறையில் கல்வி கற்கவேண்டும்.
அண்ணாமலைநகர் உட்பட தமிழகத்தில் 54 படிப்பு மையங்களும், பிற மாநிலங்களில் 20 மையங்கள் உள்ளது. தொலைதூரக்கல்வியில் பயில விரும்பும் மாணவர்கள் படிப்பு மையங்களில் விண்ணப்பத்தை பெற்றுகொள்ளலாம். இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் என்றார். இவருடன் பல்கலைக்கழக பதிவாளர் ஆறுமுகம், ஆட்சிக்குழு உறுப்பினர் திருவள்ளுவன், தேர்வுகட்டுப்பாட்டு அதிகாரி சந்திரசேகர், தொலைதூரக்கல்வி இயக்குநர் அருள் உள்ளிட்ட அனைத்துதுறை முதன்மையர்கள், தலைவர்கள் உள்ளிட்டவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.