Skip to main content

முதல்வர் காப்பீடு திட்டத்தின்கீழ் தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை...

Published on 04/06/2020 | Edited on 04/06/2020
 Corona treatment in private hospitals under the CM insurance scheme


தனியார் மருத்துவமனைகளில் முதலமைச்சரின் காப்பீடு திட்டத்தின்கீழ் கரோனாவிற்கு சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளின் சிகிச்சைக்கான கட்டண விவரங்களும் வெளியிடப்பட்டுள்ளது.


அறிகுறி இல்லாதவர்கள், லேசான அறிகுறி இருப்பவர்களுக்கு ஒருநாள் 5 ஆயிரம் ரூபாய் கட்டணமும், அனைத்து வசதிகளுடன் கூடிய தீவிர சிகிச்சை பிரிவுக்கு நாளொன்றுக்கு 9 ஆயிரத்திலிருந்து 15 ஆயிரம் வரையும் கட்டணம் பெறலாம். தனியார் மருத்துவமனைகளில் 25% படுக்கைகள் முதல்வர் காப்பீடு திட்டத்தில் சிகிச்சை கொடுக்க வேண்டும். அதிக கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். முதல்வரின் காப்பீடு திட்ட பயனாளிகள் தனியார் மருத்துவமனைகளுக்கு கட்டணம் செலுத்த வேண்டாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்திற்கு மேலாக தொகையை செலுத்தக் கூறினால் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவமனைகள் மீது முதல்வரின் காப்பீடு திட்டத்தின்கீழ் வழங்கப்பட்ட அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.

மேலும் தொடர்புக்கு 1800 425 3993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த புதிய அறிவிப்பு முதல்வர் காப்பீடு திட்டத்தின்கீழ் ஏற்கனவே பதிவு செய்தவர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சார்ந்த செய்திகள்