Skip to main content

ஆண் குழந்தைகளின் தசைகளை தாக்கி அழிக்கும் நோய்

Published on 30/06/2018 | Edited on 30/06/2018
baby

 

கோவையில் இன்று ஆண் குழந்தைகளின் , தசைகளை தாக்கி அழிக்கும் நோயை கண்டுபிடித்து அவர்களது பெற்றோர்களுக்கு உதவுதல் தொடர்பான மருத்துவர்கள், பிசியொதெபிஸ்ட் , புணர்வாழ்வு மதுத்துவர்கள் கலந்துகொண்ட  இரண்டு நாள் கருத்தரங்கம் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.


(டூசின் மஸ்குலர் டிரஸ்ட்டிராபி ) தசைகளை தாக்கி அழிக்கும் நோயால் அதிகளவு ஆண் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். இதனால் தசை திசுக்கள் தொடர்ச்சியான அழிவு, நடப்பதில் சிரமம், கெண்டைக்கால் சதை ஒழுங்கின்றி இருத்தல், சுவாசம் சம்பந்தமான பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை முன்னறே கண்டறிந்து நோயுற்றவர்களுக்கும், அவர்களது பெற்றோர்களுக்கும் உதவுதல் , முதுகெலும்பு மற்றும் பின்புறம் வளைவது முன்னெச்சரிக்கையாக தடுப்பது குறித்து  மருத்துவர்கள் , பிசியோதெரபிஸ்ட், புணர்வாழ்வு மருத்துவர்கள் உள்ளிட்ட 200 பேருக்கு இரண்டு நாள் சிறப்பு கருத்தரங்கம் கோவையிலுள்ள தனியார் ஹோட்டலில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இந்த நோயை சாதாரணமாக கண்டறிய முடியாது.


தசை சிதைவு நோயை சில பிரிவுகள் இதயத்தை பாதிக்க வாய்ப்புள்ளது என்பதுடன், இதயத் தசைநோய் அல்லது குருதி ஊட்டக்குறை போன்றவற்றை ஏற்படுத்துவதற்குக் காரணமாக அமைகிறது.  மேலும் இக்கருத்தரங்கில் அரசு மருத்துவமனை  உளவியல் மருத்துவர்கள், நரம்பியல் நிபுணர்கள், பிசியோதெரபிஸ்ட்கள் , சர்வசிக்‌ஷ அபியானில் பணிபுரியும் ஒருங்கிணைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.


 

சார்ந்த செய்திகள்