திருவண்ணாமலையில் ஹிஜாப் அணிந்து வந்த பெண்ணைத் தேர்வு எழுத அனுமதிக்காத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டம் சோமாசிபாடி கிராமத்தில் இந்தி பிரச்சார சபா நடத்திய இந்தி தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வு எழுத வந்த பெண் ஒருவர் ஹிஜாப் அணிந்திருந்தார். ஹிஜாபை அகற்றினால் தான் தேர்வெழுத அனுமதிப்போம் என அங்கிருந்தவர்கள் தெரிவித்ததால் ஷபானா என்ற அந்த பெண் ஹிஜாபை அகற்ற மறுத்துவிட்டார்.
இது குறித்து தேர்வு மேற்பார்வையாளருக்கும் ஷபானாவிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக திருவண்ணாமலை நகர டிஎஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார். இது குறித்து அந்த பெண் தெரிவிக்கையில், ''நான் டீச்சராக வேலை செய்து வருகிறேன். ஹிஜாப் எல்லாம் எங்களுடைய இஸ்லாத்தில் கழட்ட அனுமதி இல்லை என்று சொன்னதற்கு ஹிஜாபை கழட்டிவிட்டு தேர்வு எழுதினால் எழுதுங்க இல்லையென்றால் நீங்கள் கிளம்புங்க என்று சொல்லிவிட்டார்கள். அதனால் தான் நான் கிளம்பி விட்டேன்'' என்றார்.