டெங்கு காய்ச்சலால் சிறுவன் பலி
ஈரோடு மாவட்டம் சிவகிரி பாரதி தெருவை சேர்ந்தவர் கார்த்தி(30). இவரது மனைவி கவிதா(27). இவர்களின் மகன் தருண்நிதி (6) சிவகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்துவந்தான். கடந்த ஒருவாரமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தருணுக்கு சிவகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. பின்னர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பயனின்றி தருண் நேற்று இறந்தான். தருண் டெங்கு காய்ச்சலால் இறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.