Skip to main content

7 நாளில் டெங்குக்கு நிவாரணம் என கூறி மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

Published on 13/10/2017 | Edited on 13/10/2017

7 நாளில் டெங்குக்கு நிவாரணம் என கூறி மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது

7 நாட்களில் டெங்கு, மர்ம காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கப்படுமென கூறி, கோவையில் பிஏ படித்துவிட்டு மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் சன் லைப் ஹெல்த் சொல்யூசன் என்ற பெயரில் ராபர்ட் சாக்கோ என்பவர் மருத்துவம் பார்த்து வந்தார். இவர் இயற்கை மருத்துவ முறையில் நானோ தொழில் நுட்பத்தில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுமென விளம்பரம் செய்துள்ளார். மேலும் 3 முதல் 7 நாட்களில் டெங்கு மற்றும் மர்ம காய்ச்சலுக்கு நிவாரணம் அளிக்கப்படுமெனவும், 30 நாட்களில் புற்றுநோய், சிறுநீரகம், கல்லீரல் செயழிலப்பு, இருதய அடைப்புகள் சரி செய்யப்படுமெனவும் விளம்பரப்படுத்தியுள்ளார். 

இதுதொடர்பாக வந்த புகாரின் பேரில், கோவை மண்டல சுகாதர பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் சந்திரசேகர் சோதனை மேற்கொண்டார். அதில் ராபர்ட் சாக்கோ பிஏ பொருளாதாரம் படித்து விட்டு, மருத்துவம் பார்ப்பதாக தெரியவந்ததை அடுத்து, ராமநாதபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ராபர்ட் சாக்கோவை கைது செய்த காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோவை மண்டல சுகாதர பணிகள் இணை இயக்குநர் சந்திரசேகர், டெங்கு காய்ச்சல் குறித்து மக்களிடம் எழுந்துள்ள அச்சத்தை பயன்படுத்தி போலி மருத்துவர்கள் மருத்துவ சிகிச்சை அளிப்பதாக பணம் வசூலித்து வருவதாகவும், இதுபோன்ற மருத்துவர்களிடம் சென்று ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனைக்கு வரும் டெங்கு நோயாளிகள் உயிரிழக்க நேரிடுவதாகவும் கோவை மண்டல சுகாதர பணிகள் இணை இயக்குநர் சந்திரசேகர் தெரிவித்தார். இந்தாண்டு இதுவரை 8 போலி மருத்துவர்களை கைது செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

அருள்குமார்

சார்ந்த செய்திகள்