Skip to main content

பட்டா மற்றும் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவாழ் மக்கள் ஆர்ப்பாட்டம்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Demonstration by hill people to issue badges and certificates

ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு முன்பு பழங்குடி மக்கள் வீட்டுமனை பட்டா, தொகுப்பு வீடுகள், சாதி சான்றிதழ் கேட்டு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மலைவாழ் மக்கள் ராணிப்பேட்டை பேருந்து நிலையத்திலிருந்து கோட்டாட்சியர் அலுவலகம் வரை நடந்து கோசமிட்டபடி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தக் கண்டன கோஷத்தில் பொதுமக்கள் கோட்டாட்சியர்  அலுவலகத்துக்கு முன்பு நின்றபடி மாவட்ட நிர்வாகம் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று பரிசளித்து உடனடியாக அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்றும் இந்தக் கண்டன கோஷத்தில் தெரிவித்தனர்.

இந்தக் கண்டன கோஷத்தில் மாவட்டத் தலைவர் சேகர் தலைமையில் 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகளும் பங்கேற்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

மாணவர்களின் ஆபத்தான பயணம்; கிராம மக்கள் வைக்கும் கோரிக்கை!

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Students traveling dangerously in a bus near Ranipet

ராணிப்பேட்டை மாவட்டம், ராணிப்பேட்டை மற்றும் ஆற்காடு பகுதிகளில் உள்ள கிராமங்களில் பள்ளி  மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் படிக்கட்டில் தொங்கிச் சென்று பயணம் செல்லும் அபாயகரமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனைப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகக் கூறப்படுகிறது. படியில் தொங்கிக்கொண்டு செல்வதால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாகியுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு தேவையான இடங்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் எனக் கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். 

Next Story

ஆந்திர முதல்வரின் அறிவிப்பு; தமிழகத்தில் எதிர்ப்பு

Published on 29/06/2024 | Edited on 29/06/2024
Objection to Andhra barrage will be constructed at Palaru

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்று தங்களது குறைகள் மற்றும் புகார் உட்பட பல்வேறு கோரிக்கைகளைத் தெரிவித்து அதற்கான விளக்கங்களையும் கேட்டறிந்தனர்.

முன்னதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் எனத் தெரிவித்திருக்கும் சம்பவத்தைக் கண்டிக்கும் விதமாக விவசாயிகள் எழுந்து நின்றபடி தங்களது கண்டனங்களைத் தெரிவித்து கோஷங்கள் எழுப்பினர். மேலும் தடுப்பணைக் கட்டும் செயலை ஆந்திர அரசு கைவிட வேண்டும் எனவும் இதற்குத் தமிழக அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து விவசாய குறைதீர்வு கூட்டத்தை முடித்து விட்டு வெளியே வந்த விவசாயிகள், ராணிப்பேட்டை மாவட்ட விவசாயிகளின் கோரிக்கையாக ஆந்திர மாநில முதல்வர் பாலாற்றில் தடுப்பணைக் கட்டும் ஏற்பாடுகளைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனத் தெரிவித்தும் இதனை மாவட்ட ஆட்சியர் தமிழக அரசின் கவனத்திற்குக் கொண்டு சேர்க்க வேண்டுமெனவும் வேண்டுகோள் வைத்துள்ளனர். மேலும் தடுப்பணைக் கட்டப்படும் எனில் மாவட்டத்தில் உள்ள அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்கங்களை ஒன்றிணைத்து  போராட்டம் நடத்தவும் தயாராக இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்