தமிழக சட்டமன்ற புதிய அமைச்சரவையில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளோடு ஆலோசனை செய்து வருகிறார்.
அதில் பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புக்கான தேர்வு நடைமுறைகள் குறித்தும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்குவது குறித்தும், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடத்துவது குறித்தும் பல்வேறு ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இதில் அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்களின் உதவியோடு அவர்கள் முன்வைத்து இருக்கக்கூடிய பல்வேறு யோசனைகளின் அடிப்படையில் மாணவர்களின் உடல்நலம் மற்றும் எதிர்காலம் இவை இரண்டையும் கருத்தில் கொண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வை எப்படி நடத்துவது என்றும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் தேர்வு இல்லாமல் மதிப்பெண் கணக்கிடுவது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகளை பெற்றுள்ளதாகவும், தமிழக முதல்வருடன் ஆலோசித்து அதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கபடும் என்றும் தெரிவித்துள்ளார்.