Skip to main content

ஒரே நாளில் 1.2 லட்சம் பேருக்கு இ-பாஸ்

Published on 18/08/2020 | Edited on 18/08/2020
E-pass for 1.2 lakh people in a single day

 

 

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை அமலில் இருக்கும் நிலையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. ஆனால் தமிழக அரசு இ-பாஸ் பெறுவதற்கான தளர்வுகளை நேற்று முதல் அமலுக்கு கொண்டுவந்தது . அதன்படி விண்ணப்பிக்கப்பட்ட அனைவருக்கும் நேற்று  இ-பாஸ் வழங்கப்பட்டது.

 

இதனால் வெளி மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும், சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு செல்வோர்களுடைய எண்ணிக்கை அதிகரித்ததால் சென்னையின் எல்லையான பரனூர் டோல்கேட்டில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

 

இந்நிலையில் தமிழக அரசு நேற்று ஒரே நாளில் மட்டும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. வழக்கமாக சராசரியாக 15 ஆயிரம் இ-பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும் நிலையில், நேற்று ஒரே நாளில் 1.2 லட்சம் பேருக்கு இ-பாஸ் வழங்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்