காணொளி காட்சி மூலம் செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், "அந்தமானில் வங்கக்கடல் பகுதியில் மே 16- ஆம் தேதி புயல் உருவாக வாய்ப்புள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி மே 15- ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும்.
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மே 16- ஆம் தேதி புயலாக மாறி மத்திய வங்கக்கடல் பகுதியில் மையம் கொள்ளும். மே 15- ஆம் தேதி 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மே 16- ஆம் தேதி 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மே 17- ஆம் தேதி 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசக்கூடும்.
இதன் காரணமாக மீனவர்கள் மே 15, 16, 17 ஆகிய தேதிகளில் மத்திய வங்கக்கடல் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம்". இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறினார்.