பல்வேறு தடைகள், எதிர்ப்புகள், நீதிமன்ற வழக்குகளுக்குப் பிறகு நேற்று முன் தினம் (ஜூலை 11) அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று முடிந்த நிலையில் மறுபுறம் இருதரப்பு மோதல் காரணமாக அதிமுக தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டது. மோதல் காரணமாக பலர் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில் போலீசார் மூன்று தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில் ஜூலை 11 நடந்த பொதுக்குழுவின் தீர்மானங்களை முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு சென்று தாக்கல் செய்துள்ளார்.
அதேபோல் அ.தி.மு.க எம்.ஏ.ஏக்கள் கூட்டம் வரும் ஜூலை 17 ஆம் தேதி கூட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க தலைமை அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ளதால் எடப்பாடி பழனிசாமி வீட்டில் இக்கூட்டம் நடைபெற இருப்பதாகவும், துணை குடியரசுத் தலைவர் தேர்தல் பற்றி ஆலோசிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.