
திருவாரூர் அருகே நடைபெற்ற ஆசிரியர்கள் கூட்டுறவு சங்க தோ்தலில் திமுக ஆதரவு சங்கம் அமோக வெற்றி பெற்றது. வெற்றி பெற்றவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி இசட் ஏ56 ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தில் முறைகேடு காரணமாக நிறுத்தப்பட்ட தோ்தல் நீதிமன்ற உத்தரவின் பேரில் கடந்த 25ந்தேதி வேட்புமனு நடைபெற்று கடந்த செப்டம்பர் 1ம் தேதி வாக்குப்பதிவு முடிந்தது.
இந்நிலையில் வாக்குப்பதிவு எண்ணிக்கை நடைபெற்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் போட்டியிட்ட அனைவரும் 80 சதவிகிதம் பெற்று அமோக வெற்றி பெற்றனர். எதிர்த்து போட்டியிட்டவர்கள் அனைவரும் தோல்வியுற்றனர்.
இந்த தோ்தல் வெற்றியை தொடர்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் வெற்றி பெற்ற 11 இயக்குநர்களும் திருவாரூர் சன்னதி தெருவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.