Skip to main content

சிறுமியை அடித்து கொன்று முந்திரி தோப்பில் புதைப்பு!  

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த மேலகுப்பம் கிராமத்தில் வசித்து வருபவர் ராஜமாணிக்கம்- கமலா குடும்பத்தினர். ராஜமாணிக்கம் தனது மனைவியை விட்டு தனியாக வாழ்ந்து வருகிறார் என்று கூறப்படுகிறது. கமலா ஊர் முழுவதும் வட்டிக்கு பணம் விட்டு சம்பாதிப்பததாகவும், வட்டி தரவில்லை என்றால் மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவார் என்றும் அக்கம்பக்கத்தினர் கூறுகின்றனர். இவர்கள் வீட்டில் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கல்லமேடு கிராமத்தை சேர்ந்த உத்தண்டி-  ராஜேஸ்வரி குடும்பத்தினர் கூலிக்கு வேலை செய்து வருகின்றனர்.  

CUDDALORE CHILD INCIDENT POLICE INVESTIGATION

(சிறுமியின் தாய் ராஜேஸ்வரி)

இவர்களுக்கு அம்சவல்லி (வயது 8), மீனா(6) கனகவல்லி (வயது 2) என மூன்று பெண் குழந்தைகள் உள்ளது.  இந்நிலையில் கடந்த 26.10.2019 ஆம் தேதி ராஜேஸ்வரி தனது மூன்றாவது குழந்தையை அழைத்துக்கொண்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அச்சமயத்தில் கமலா தனது வீட்டில் இருந்த ராஜேஸ்வரியின் இரண்டாவது மகளான ஆறு வயது சிறுமியான மீனாவை வேர்க்கடலை தின்றதற்காக சுவற்றில் அடித்து கொலை செய்துள்ளார். இக்கொலையை மறைப்பதற்காக கமலா தனது மகள் அஞ்சலை மற்றும் மகன் அருள் மற்றும் ஐயப்பன் ஆகிய நால்வரின் உதவியுடன் குழந்தையை காரில்  தூக்கிக்கொண்டு முதனை கிராமத்தில் தனக்கு சொந்தமான முந்திரி தோப்பில் குழித்தோண்டி புதைத்துள்ளார். 

CUDDALORE CHILD INCIDENT POLICE INVESTIGATION

                                                                                                                                                      (சிறுமியை கொலை செய்த கமலா)

விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு சென்று திரும்பிய ராஜேஸ்வரி தனது மகளை காணவில்லை என்று பல்வேறு இடங்களில் தேடி உள்ளார். தனது மகள் கிடைக்காத சோகத்தில் செய்வதறியாமல் திகைத்துள்ளார். இந்நிலையில் நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் லோகநாதனுக்கு ராஜேஸ்வரியின் மகளைப் பற்றி ரகசிய தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் அடிப்படையில் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர் மேலக்குப்பம் கிராமத்தில் வசித்து வந்த கமலாவை அழைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இவ்விசாரணையில் ராஜேஸ்வரி மகளான மீனாவை அடித்துக் கொன்றதும், தனது மகன் மகளுடன் சென்று குழித்தோண்டி புதைத்துள்ளதையும் கூறியுள்ளார்.  

CUDDALORE CHILD INCIDENT POLICE INVESTIGATION


பின்னர் காவல்துறையினர் கமலாவை அழைத்து கொண்டு, புதைத்த இடத்தை காட்ட சொல்லி, அவ்விடத்தை தோண்டினர். முந்தரி மரத்துக்கு அருகே சுமார் 4 அடிக்கு மேல் தோண்டியதில், அழுகிய நிலையில் சிறுமி மீனாவின் உடலை காவல்துறையினர் கைப்பற்றினர். பின்பு உடலை மருத்துவர்கள் கொண்டு, உடற்கூறு ஆய்வு செய்து, தடயங்களை கைப்பற்றினர். இதுகுறித்து நெய்வேலி காவல் நிலையத்தினர் கொலை வழக்குப்பதிவு செய்து, கமலா உள்ளிட்ட இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளி ஒருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். பின்னர்  மீனாவின் உடலை அவர் தாயார் ராஜேஸ்வரிடம் போலீஸார் ஒப்படைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரப்பரப்பு நிலவியது.



 

சார்ந்த செய்திகள்