Skip to main content

பரங்கிப்பேட்டையில் சுருக்கு வலைக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இரு படகுகளுக்கு தீ வைப்பு 

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

 

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள அன்னங்கோயில் மீன்பிடி இறங்கு தளத்தில் இரண்டு படகுகளுக்கு தீ வைத்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

 

b

 

பரங்கிப்பேட்டையை சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கடலில் சுருக்கு வலையை பயன்படுத்தி சில மீனவர்கள் மீன் பிடிப்பதை தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இதனால் மீனவர்கள் மத்தியல் அவ்வப்போது பிரச்சனை ஏற்பட்டு வந்தது. இந்த சம்பவத்தால் மீனவர்கள் அடிக்கடி கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சம்பவமும் அடிக்கடி நடக்கும். இந்தநிலையில் வருவாய் துறையினர் மற்றும் காவல்துறையினர் இதுதொடர்பாக மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்துவந்தனர்.

 

இந்நிலையில் அன்னங்கோயில் கடல்முகத்துவார பகுதியில் கடலுக்கு சுருக்கு வலை கொண்டு செல்லும் படகுகளை கண்காணிக்கும் வகையில் நான்கு படகுகள் நிறத்திவைத்து கண்காணித்து வந்துள்ளனர். இதனைதொடர்ந்து திங்கள்கிழமை காலை நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4 படகுகளில் இரண்டு படகிற்கு மர்மநபர்கள் தீ வைத்துள்ளனர். தீ மளமளவென பரவி கரும் புகை வெளியிட்டதால் அந்த பகுதியில் உள்ள மீனவர்கள் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு இடத்தில் கூடினார்கள். இதனால் பதற்றம் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் ஒன்று கூடி மீனவர்களை விரட்டி அடித்து பதற்றத்தை தனித்தனர்.

 

 செவ்வாய்க் கிழமை சம்பந்தபட்ட மீனவ கிராமத்தில் மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வம் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது. மீனவ கிராமத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுவருகிறார்கள்.  

சார்ந்த செய்திகள்