




Published on 12/10/2020 | Edited on 12/10/2020
எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் புதிய வேளாண் மசோதாக்களை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இம்மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து போராட்டம் வலுத்துள்ளது.
இந்த சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், விவசாய அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று, சென்னை கிண்டியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தலைமையில் விவசாய சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.