Skip to main content

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு; 3 அரசுப் பேருந்துகள் ஜப்தி

Published on 02/03/2023 | Edited on 02/03/2023

 

Court impounded 3 government buses in Karur

 

கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்த மூன்று குடும்பத்திற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இழப்பீடு வழங்காததால் குளித்தலை பேருந்து நிலையத்தில் 3 அரசுப் பேருந்துகளை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தது பரபரப்பை கிளப்பியுள்ளது. 


திருச்சி மாவட்டம் மணப்பாறை சாலையில் நடந்த விபத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு அரசுப் பேருந்தில் பயணித்த விஜயராணி(32) மற்றும் அவரது மகன் வினோத்(2) இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் மணப்பாறையில் அரசுப் பேருந்தில் பயணித்த ஜேம்ஸ் சந்தியாகு(40) என்பவரும் மற்றொரு விபத்தில் உயிரிழந்தார். இது குறித்து உயிரிழந்த குடும்பத்தினர் குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த வழக்கு குளித்தலை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், வழக்கை விசாரித்த சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முகக்கனி கடந்த மாதத்தில் 3 பேர் உயிரிழப்பிற்கு இழப்பீடு தொகையாக ரூ.42, 34, 016  ரூபாய் வழங்க அரசு போக்குவரத்து கழகத்திற்கு உத்தரவிட்டார்.

 

அதன் பிறகும் உரிய இழப்பீட்டுத் தொகை  வழங்காததால் குளித்தலை சார்பு நீதிமன்ற நீதிபதி சண்முகக்கனி உத்தரவின் பேரில் குளித்தலை பேருந்து நிலையம் வந்த மூன்று அரசுப் பேருந்துகள், நீதிமன்ற ஊழியர்களால் ஜப்தி செய்யப்பட்டது. ஜப்தி செய்யப்பட்ட பேருந்துகள் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்