Skip to main content

"ஊரடங்கால் சென்னையில் 79% குற்றங்கள் குறைந்துள்ளது" - சென்னை காவல்துறை அறிவிப்பு!

Published on 17/04/2020 | Edited on 17/04/2020

உலக அளவில் பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கரோனா வைரஸ் இந்தியாவிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 12,759- லிருந்து 13,387 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் உயிரிழந்தோர் எண்ணிக்கை 420- லிருந்து 437 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். 


   CoronaVirus - Lockdown - chennai police Announcement

 

இந்நிலையில் ஊரடங்கு காலத்தில் சென்னையில் அனைத்து குற்றங்களும் 79% குறைந்துள்ளன என்று சென்னை காவல்துறை அறிவிப்பு வெளிட்டுள்ளது. மேலும் கொலை வழக்கில் 44%, கொள்ளை வழக்கில் 75%, வீடு புகுந்து திருடுதல் வழக்கில் 59% குற்றங்கள் குறைந்துள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.  

 

சார்ந்த செய்திகள்