Published on 09/03/2018 | Edited on 09/03/2018

உலக மகளிர் தினத்தையொட்டி பெண்களின் பாதுகாப்பு குறித்தும், சமூதாயத்தில் அனைத்து துறைகளிலும் பெண்களின் வளர்ச்சி குறித்தும், பெண்ணியத்தை போற்றும் வகையில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக சென்னை சேத்துப்பட்டில் உள்ள மெட்ராஸ் கிறித்துவ கல்லூரி மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் விழிப்புணர்வு பேரணி நடத்தினர்.

இந்த பேரணியை பள்ளியின் முதல்வர் மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பெண் சுதந்திரம் பற்றியும், பெண்களின் முன்னேற்றம் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பிடித்தப்படி மாணவிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்றனர்.