Skip to main content

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை- தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம்!

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

கரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் கல்வி நிறுவனங்களை மார்ச் 31- ஆம் தேதி வரை மூட மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதேபோல் சுற்றுலாத் தலங்கள், வணிக வளாகங்கள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள், தியேட்டர்கள், மூடவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

CORONAVIRUS ISSUE SCHOOLS AND COLLEGES HOLIDAYS

அதன் அடிப்படையில் தமிழகத்திலுள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் 10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள், பல்கலைக்கழகத் தேர்வுகள் திட்டமிட்டப்படி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

அரசின் உத்தரவை மீறி ஒரு சில பள்ளிகள் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து, தமிழக பள்ளிக்கல்வி இயக்ககம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில் "பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. 

 

சார்ந்த செய்திகள்