''மாஸ்க் மாட்டு... நீ மாஸ்கு மாட்டு...
கையை கழுவு... ஏய்... ஏய்... சோப்பு போட்டு...
மாஸ்க் மாட்டு... நீ மாஸ்கு மாட்டு...
கையை கழுவு... சோப்பு போட்டு...
கண்ணு, காது, வாய நல்லா மூடு...
அங்கே இங்கே போரதெல்லாம் தள்ளிப்போடு...
சும்மா ரிஸ்கு எதுக்கு...
நீ மாஸ்கு மாட்டு...
கொத்துக் கொத்தா போறானப்பா சுத்தி உள்ள நாட்டுல...''
எனத் தொடருகிறது இந்தப் பாடல்.
கரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்காக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அரசியல் கட்சிகள் மற்றும் சமூக நல அமைப்புகள் பொதுமக்களிடம் பல்வேறு விழுப்புணர்வுகளையும், உதவிகளையும் செய்து வருகின்றன. அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகிகள் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்தப் பாடலை உருவாக்கியுள்ளனர். இந்த மாவட்டம் முழுவதும் வாட்ஸ் அப்புகளில் இந்தப் பாடல் வலம் வருகிறது. கவிஞர் தனிக்கொடி எழுதிய இந்தப் பாடலை சத்யன் மகாலிங்கம் இசையமைத்துள்ளார். அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் ஆர்.சரவணன் இதனைத் தயாரித்துள்ளார்.
மேலும் இந்தக் குழுவினர் இதுவரை 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு காய்கறிகளை இலவசமாக வழங்கியுள்ளனர். மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அருண்குமாரிடம் இரண்டாயிரம் முகக் கவசகங்களை வழங்கியுள்ளனர். தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.