Published on 30/03/2020 | Edited on 31/03/2020
![corona](http://image.nakkheeran.in/cdn/farfuture/61mSVT7gWo86gloBAoYikwCCdSorH7C-3MxIISuGi_I/1585591311/sites/default/files/inline-images/sw21_0.jpg)
உலக அளவில் குழந்தைகளை கரோனா தாக்கவில்லை என்ற நம்பிக்கை இருந்தது. அதனால் நம் இந்திய / தமிழக மருத்துவர்களின் கவனப் பார்வை, பெரியவர்கள் மற்றும் முதியவர்களின் மீதே இருந்து வந்தது. கரோனா வைரஸ் குழந்தைகளையும் விட்டுவைக்காது என்று இப்போது கிடைத்திருக்கும் ஒரு கவலைக்குரிய ரிசல்ட், உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 10 மாதக் குழந்தைக்கு கரோனா வைரஸ் இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. இது மருத்துவர்களையும் ஆராய்ச்சியாளர்களையும் திகைக்க வைத்திருக்கிறது.