கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் மளிகைக் கடைகள், பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் ஆகியவற்றின் செயல்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கோயம்பேடு காய்கறி சந்தை, பிற காய்கறி விற்பனைக் கடைகள், அத்தியாவசிய மளிகைப் பொருள்களை விற்பனை செய்யும் கடைகள் ஆகியன காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே திறந்திருக்க வேண்டும்.
பெட்ரோல் பங்க் நிலையங்கள் காலை 6 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி இன்று சென்னையில் பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் பிற்பகல் 2.30 மணிக்கு விற்பனையை நிறுத்தியது. ஆனாலும், அரசு வாகனங்கள், 108 அவசர ஊா்திகள் போன்ற ஊா்திகளுக்கான பிரத்யேக பெட்ரோல் நிரப்பும் நிலையங்கள் மட்டும் நாள் முழுவதும் தொடா்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.