தாய்லாந்து நாட்டிலிருந்து ஈரோடு வந்த 7 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. தாய்லாந்திலிருந்து வந்த 7 பேரில் ஒருவர் மார்ச் 16ந் தேதியே இறந்து விட்டார். மீதி 6 பேரும் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
![corona spreading Case- six Thailand people arrested in erode](http://image.nakkheeran.in/cdn/farfuture/7GntJ_Kca3ACM4R9ogXem-57PcEvHWoQG081Ze_P0oY/1586449968/sites/default/files/inline-images/11111_238.jpg)
இந்நிலையில், ஈரோடு கொல்லம்பாளையம், சுல்தான்பேட்டையில் தாய்லாந்து நாட்டில் இருந்து வந்த ஆறு பேர் போலியான விசா மூலம் வந்ததாகவும், அவர்கள் மதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஷோவாங்டோன், ராமென் வாங்மொபோ, இமான்கெளசிக், லத்கொரல்டு ஷோனை, அமெண்ட், சமூர்முகமது ஆகிய ஆறு பேர் மீது ஈரோடு வட்டாச்சியர் பரிமளா தேவி அளித்த புகாரின் பேரில், இந்திய தண்டனை சட்டம் 269, 270 மற்றும் 1946 ஆண்டு விசா சட்டம் மீறுதல் பிரிவு 13ல் 1 , 13ல் 2 மற்றும் 14வது பிரிவு மற்றும் தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் பிரிவு 134 , 135 (கொடிய நோய் உள்ளது தெரிந்தும் பொதுமக்களிடம் பரப்புதல்) ஆகிய ஆறு பிரிவுகளின் கீழ், ஈரோடு சூரம்பட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அந்த ஆறு பேரையும் கைது செய்த காவல்துறையினர், கரோனா தனி வார்டில் வைத்து அவர்களை பாதுகாத்து வருகின்றனர்.