Skip to main content

தஞ்சையில் மேலும் 2 தனியார் பள்ளிகளில் கரோனா... இதுவரை 100 மாணவர்கள் பாதிப்பு!! 

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

corona

 

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அரசு உதவிபெறும் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் உள்ள 460 மாணவிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் மொத்தம் 56 மாணவிகளுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் 350 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், பெற்றோர்கள் 9 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது.

 

அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியருக்கும், மதுக்கூர் அருகே ஆலத்தூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஆய்வகப் பெண் உதவியாளர் ஒருவருக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நான்காவதாக நேற்று (18.03.2021) காலை தஞ்சையில் அரசு உதவிபெறும் பள்ளியில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவி ஆகியோருக்கும், கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7 மாணவர்களுக்கும் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

 

இந்நிலையில் இன்று மேலும் இரண்டு தனியார் பள்ளிகளில் 27 மாணவிகள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் தஞ்சை சாஸ்தா பல்கலை மாணவர்கள் இரண்டு பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 68 மாணவர்களுக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது கரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. தஞ்சையில் இதுவரை மொத்தம் 7 பள்ளிகளில் கரோனா உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்