தவறான மனிதர்களை சரியான நேரத்தில் அடையாளம் காட்டியுள்ளது காலச்சூழல் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நடிகர் ரஜினிகாந்த் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்து நிதியுதவியும் வழங்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். தூத்துக்குடியில் ஆட்சியர் அலுவலகம், போலீஸ் குடியிருப்புகளுக்கு தீ வைத்தது எல்லாம் பொதுமக்கள் அல்ல. சமூக விரோதிகள் மற்றும் விஷக் கிருமிகள். அவர்கள்தான் இந்த வேலையை செய்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்திலும் சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர். தமிழகத்தில் சமூக விரோதிகள் அதிகரித்துள்ளனர் என அவர் கூறியிருந்தார்.
தூத்துக்குடி போராட்டத்தின்போது சமூக விரோதிகள் ஊடுருவியிருந்தனர் என்ற ரஜினியின் இந்த கருத்து அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் ரஜினிகாந்த் தூத்துக்குடி போராட்டத்தை கொச்சப்படுத்தியதாக பலரும் குற்றம்சாட்டி அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்த சென்னை விமானநிலையம் வந்தடைந்த அவர் அங்கு செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது.. போராட்டத்தை சமூகவிரோதிகள் தான் உள்ளே புகுந்து கெடுத்தனர் எனக்கு அது தெரியும். ஜல்லிக்கட்டில் கடைசி நேரத்தில் எப்படி கெடுத்தார்களோ. அதேபோல் இப்போதும் செய்துள்ளார்கள்.
இந்த பிரச்சனை தொடங்கியதே போலீசை அடித்த பின்பு தான். சமூகவிரோதிகள் போலீசை தாக்கினர். அப்போது தான் பிரச்சனை தொடங்கியது. காவல்துறையை யூனிபார்முடன் யார் அடித்தாலும் எப்போதும் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன் என்று ஆவேசமடைந்தார். மக்கள் போராட்டம், போராட்டம், போராட்டம்ன்னு சொல்லி போய்விட்டால் தமிழ்நாடு சுடுகாடு ஆகிவிடும் என்றார். ரஜினியின் இந்த கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தமிழகத்தில் போராட்டங்களே கூடாது. போராட்டங்களை ஜெயலலிதா போல இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ரஜினிகாந்த் - பாசிசத்தின் உச்சம். தவறான மனிதர்களை சரியான நேரத்தில் அடையாளம் காட்டியதற்காக காலச்சூழலுக்கு தமிழக மக்கள் நன்றி கூற வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) May 31, 2018
இந்நிலையில், இதுகுறித்து இன்று தனது டிவிட்டரில் கருத்து தெரிவித்த ராமதாஸ்,
தமிழகத்தில் போராட்டங்களே கூடாது. போராட்டங்களை ஜெயலலிதா போல இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: ரஜினிகாந்த் - பாசிசத்தின் உச்சம். தவறான மனிதர்களை சரியான நேரத்தில் அடையாளம் காட்டியதற்காக காலச்சூழலுக்கு தமிழக மக்கள் நன்றி கூற வேண்டும் என அதில் கூறியிருந்தார்.