Skip to main content

''கரோனா செய்திகளை எச்சரிக்கையுடன் வெளியிட வேண்டும்''-காட்சி ஊடக ஆசிரியர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Published on 16/05/2021 | Edited on 16/05/2021

 

' Corona news should be published by the media with caution '' - MK Stalin's advice to visual media editors!

 

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில் செய்தி ஆசிரியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

 

சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தி ஆசிரியர்கள், காட்சி ஊடக ஆசிரியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். ஆலோசனை கூட்டத்தில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின்,   ''கரோனா பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் ஊடகத்தின் பங்களிப்பு முக்கியமானது.  கரோனாவில் இருந்து அனைத்து பணியாளர்களையும் காக்க நடவடிக்கை எடுக்கப்படும். மருத்துவ நெருக்கடியையும், நிதி நெருக்கடியை ஒருசேர எதிர் கொண்டு வருகிறோம் எனவே கரோனா உள்ளிட்ட செய்திகளை மிகுந்த எச்சரிக்கையுடன் ஊடகங்கள் வெளியிட வேண்டும். கரோனா விவகாரத்தில் தமிழக அரசு வெளிப்படைத் தன்மையுடன் இருக்கிறது. எதையும் மறைக்க கூடாது என அமைச்சர்களிடமும், அதிகாரிகளிடமும் நான் கூறியுள்ளேன். அரசின் செய்தியில் சந்தேகம் இருப்பின் விளக்கம் கேட்கலாம். அரசுக்கு ஆக்கபூர்வ ஆலோசனையை ஊடகங்கள் தெரிவிக்கலாம்.  செய்திகளில் கரோனா விழிப்புணர்வு காட்சிப் பதிவுகளை வெளியிட வேண்டும். முகக் கவசம் அணியுமாறு தொலைக்காட்சியில் வலியுறுத்தலாம்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்