Skip to main content
Breaking News
Breaking

விழித்திரு... விலகியிரு... வீட்டிலிரு... ஓவியங்களால் உணர்த்தும் காவல்துறை..! (படங்கள்)

Published on 14/04/2020 | Edited on 14/04/2020

 

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக மே மாதம் 3- ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். எனினும், சிலர் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றி வருகின்றனர். 
 

இதுவரை ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதற்காக 1.75 லட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே, கரோனா பரவுதலின் ஆபத்தைக் குறித்தும், ஊரடங்கின் முக்கியத்துவம் குறித்தும் காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு வகையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்தவகையில், 
 

சென்னை, அண்ணா சாலையில் ‘யூ.யூ.யூ’ என்ற தொண்டு நிறுவனமும், சென்னை மாநாகர போக்குவரத்து காவல்துறையும் இணைந்து ஸ்பென்சர் பிலாசா சிக்னல் அருகில் கரோனா குறித்த விழிப்புணர்வு ஓவியத்தை வரைந்தனர்.  

 

 

 

சார்ந்த செய்திகள்