Published on 25/06/2022 | Edited on 25/06/2022

தமிழகத்தில் பரவலாக குறைந்திருந்த கரோனா பாதிப்பானது சில நாட்களாக சற்று அதிகரித்து பதிவாகி இருந்த நிலையில் பல இடங்களில் கரோனா கட்டுப்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதேபோல் வேலூரில் பெரிய பெரிய வணிக வளாக கடைகளில் ஏசி பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரியில் ஒரே நாளில் 30 மாணவர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்த 100 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 30 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தூத்துக்குடியில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகள் ஆன்லைனில் நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.