Published on 03/11/2021 | Edited on 03/11/2021
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் பிளம்பர், எலக்ட்ரீசியன், கணினி ஆபரேட்டர் உள்பட பல்வேறு பணிகளில் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றிவருகிறார்கள்.
இவர்கள் தங்களுக்குத் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2 நாட்களுக்கு முன்பு அரசு மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இருப்பினும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால் நேற்றுமுதல் (02.11.2021) காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். அதனையடுத்து, தொழிலாளர் நலத்துறை அலுவலர் தனபால் முன்னிலையில் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காத்திருப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.