கன்னியாகுமாியில் இருந்து காஷ்மீா் வரை இந்தியா ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி குமாி மாவட்டத்தில் தன்னுடைய நடைபயணத்தை 4 நாட்கள் திட்டமிட்டுள்ளதால் இந்த பயணத்துக்காக கடந்த ஒரு மாதமாக கன்னியாகுமாியில் காங்கிரஸ் தலைவா்கள் முகாமிட்டு தொடக்க விழா மற்றும் ராகுல் காந்தி நடந்து செல்லும் சாலை தங்கும் இடம் சம்பந்தமாக ஆய்வுகள் மற்றும் ஆலோசனைகள் நடந்து வந்தது.
குமரி மாவட்டத்தில் இந்த ஆலோசனைகள் எல்லாம் கன்னியாகுமாி எம்.பி விஜய் வசந்த் தலைமையில் நடந்தது. இதனால் விஜய் வசந்த் தினமும் ஒவ்வொரு காங்கிரஸ் நிா்வாகிகளை சந்தித்து ஆலோசனைகள் நடத்தி வந்தாா். இந்த நிலையில் கடந்த 7-ம் தேதி இந்த பயண தொடக்க விழாவில் இருந்து ராகுல் காந்தியுடன் நடை பயணத்திலே இருந்து வருகிறாா் மேலும் நடை பயணத்தில் ராகுல் காந்தி ஓய்வு எடுத்தாலும் விஜய் வசந்த் ஓய்வு இல்லாமல் அடுத்த கட்ட பணிகளை குறித்து நிா்வாகிகளிடம் தொடர்பில் இருப்பாா். இந்தநிலையில் 3-ம் நாள் நடைபயணத்தில் இன்று 9 ம் தேதி மதியம் ராகுல் காந்தி புலியூா்குறிச்சி முட்டியிடிச்சான் பாறை தேவசகாயம் சா்ச்சில் ஓய்வு எடுத்தாா்.
அப்போது அதன் வளாகத்தில் காங்கிரஸ் மற்ற நிா்வாகிகளும் இருந்தனா். அப்போது ஒரு வராண்டாவில் விஜய் வசந்த காங்கிரஸ் நிா்வாகிகளிடம் பேசிக் கொண்டிருந்தாா். பிறகு நிா்வாகிகள் அங்கியிருந்து சென்றதும் அந்த வராண்டாவிலே படுத்து தூங்கி விட்டாா். இதை மற்றவா்கள் எல்லாம் பாா்த்து அவா் தூங்கட்டும் என்று சொல்லி கொண்டு சென்றனா். பின்னா் அரை மணி நேரம் கழித்து எழுந்த விஜய் வசந்த் இரவு நன்றாக தூங்கி ஐந்தாறு நாட்கள் ஆகி விட்டது. பகல் நேரத்திலும் நல்ல ரெஸ்ட் இல்லை. அதுனால இருந்த அசதியால் எனக்கு தொியாமலே இருந்த இடத்தில் தூங்கி விட்டேன் என்றாா்.