Skip to main content

மக்கள் உயிரை காவு வாங்கும் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டம்...

Published on 14/06/2020 | Edited on 14/06/2020

 

road




கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகிலுள்ள கருவேப்பிலங்குறிச்சியில் இருந்து தொழுதூர் வரை 29 கிலோமீட்டர் தூரத்திற்கு சுமார் 5 கோடியே 87 லட்சம் மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது. சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இந்த பணிகளை 2018-19ம்  ஆண்டுக்குள் பணிகள் முடிக்கப்படும் என அறிவிப்பு பலகை பணி நடைபெறும் சாலை ஓரம் வைத்துள்ளனர். ஆனால் இன்றைய தேதி வரையில் பணிகள் முடிக்கப்படவில்லை. தற்போது தான் ஆங்காங்கே சாலை விரிவாக்கத்திற்கு குழி தோண்டுவதும் சிறு பாலங்களை விரிவுபடுத்தும் பணிகளும் நடந்து வருகின்றன. மிக மிக மெதுவாக ஆமையை விட சாலை பணிகள் மெதுவாக நடந்து வருவதோடு இந்த சாலை ஏற்கனவே 7 மீட்டர் அகலம் இருந்ததை பதினோரு மீட்டர் அகல தார் சாலையாக  அகலப்படுத்தபடுகிறது.

 

 

rrrr

 



இந்த சாலை பணிகளை அரங்கூர் முதல் ராமநத்தம் வரையும் பட்டூர் முதல் கோழியூர் முடக்கு வரை சாலைப் பணிகள் நடைபெறவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, அந்த சாலை பிறகு  விரிவாக்கம் செய்யப்படும் என்று கூறுகிறார்கள். இந்த சாலை விரிவாக்க பணிகள் தாமதம் காரணமாகவும் அலட்சியம் காரணமாகவும் அடிக்கடி விபத்தில் சிக்கி இறக்கிறார்கள். கை கால்கள் முறிகின்றன. காரணம் சாலை விரிவாக்கப் பணிக்காக பாலங்கள் விரிவு படுத்தப்படுகின்றன. அந்த இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்கப்படுவதில்லை. மேலும் அந்த இடங்களில் வாகனங்கள் மெதுவாக செல்லும் அளவிற்கு வேகத்தடைகளையும் அமைக்கப்படுவதில்லை. இதனால் வேகமாக செல்லும் வாகனங்கள் எதிரே வருபவர்கள் மோதி விபத்துக்கள் ஏற்படுவது, பாலம் கட்டுமானப் பணிகளில் எச்சரிக்கை பலகை இல்லாததால் அதில் விழுந்து சாவதும், கை கால் முறிவதும் என தொடர் சம்பவங்கள்  நடைபெற்று வருகின்றன.
 


சாலை பணி நடைபெறுவது தெரியாமல் கம்பி கட்டப்பட்டுள்ள இடத்தில் விழுந்து உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்படுகின்றன. சிலர் இறந்து போனசம்பவம் நடந்துள்ளது. சமீபத்தில் பெண்ணாடத்தில் பாலம் விரிவாக்க பணி  நடைபெற்ற இடத்தில்  டூவீலரில் வந்த ஒருவர் அதில் விழுந்து  இறந்து போயுள்ளார்.  அதேபோன்று நேற்று 13ஆம் தேதி கொடிக்களம் அருகே  பொதுப்பணித்துறை வாய்க்காலில் பாலம் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த இடத்தில் வேகத்தடை அமைக்கப்படவில்லை. இதனால் நேற்று பெண்ணாடத்திலிருந்து வேல்முருகன் என்ற இளைஞர் தனது பாட்டி தமிழரசியை டூவீலரில் அழைத்துக் கொண்டு திட்டக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பாலம் வேலை நடைபெறும் அந்த மைய நடுப்பகுதியில் போகும் போது எதிரே சாலை போட தார் கலந்த ஜல்லி ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று அதன் பின் பக்க கதவு டூவீலரில் உட்கார்ந்து சென்ற தமிழரசி தலையில் இடித்தது நிலைதடுமாறி தமிழரசி கீழே விழுந்தார். அவர் தலை முழுவதும் ரத்தம் வழிந்தது அவரை வைத்து பைக் ஓட்டிய அவரது பேரன் வேல்முருகனுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இருவரையும்  ஆம்புலன்ஸ் மூலம்  திட்டக்குடி  அரசு மருத்துவமனைக்கு  கொண்டு செல்லப்பட்டனர். தமிழரசியை பரிசோதித்த  டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். வேல்முருகன்  உயிர் பிழைத்துள்ளார்.
 


இந்த பாலம் நடைபெறும் இடத்தில்  இருபக்கமும்  வேகத்தடைகள்  போடப்பட்டிருந்தால்  இந்த விபத்து நடந்திருக்காது  என்கிறார்கள் அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள். இப்படி தொடர்ந்து மக்கள் உயிரை காவு வாங்கிக் கொண்டிருக்கிறது நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள். மேலும் இந்த பணிகளை காலதாமதமாக செய்வதால் சாலையோரம் ஏற்கனவே சென்றுகொண்டிருக்கும் குடிநீர் பைப் லைன்கள் பிஎஸ்என்எல் டெலிபோன் கேபிள் இணைப்புகள் அடிக்கடி சேதப் படுத்தப் படுகின்றது.

 

ttttttt

                                                        சாலை விபத்தில் உயிரிழந்த தமிழரசி

 

வேலைகளை உடனுக்குடன் முடிக்காமல் இப்படி ஆண்டுக்கணக்கில் மெதுவாக செய்வதால் குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைகிறார்கள். டெலிபோன் கேபிள்கள் சேதமடைவதால் நெட்வொர்க் வைத்திருக்கும் பலர் தங்கள் பணிகளை செய்ய முடியாமல் பாதிக்கப்படுகிறார்கள். மாதா மாதம் டெலிபோன் துறைக்கு பில்கள் மட்டும் கட்டப்பட்டு வருகிறோம். ஆனால் டெலிபோன் இணைப்புகள் இன்டர்நெட் இணைப்புகள் மட்டும் கிடைப்பதில்லை. பிஎஸ்என்எல் அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டால் சாலை விரிவாக்கப்பணியை காரணம் காட்டுகிறார்கள். பொதுமக்களை பாடாய்படுத்துகிறது இந்த சாலை விரிவாக்க பணி. இது மக்கள் பயணிக்கும் சாலையா? அல்லது மக்களை சாகடிக்கும் சாலையா? என கேட்கிறார்கள் பொதுமக்கள். சாலை பணிகளை எப்போதுதான் முடிப்பார்கள் என்பது புரியாத புதிராக உள்ளது.



இதுகுறித்து விருத்தாசலம் நெடுஞ்சாலை துறை அலுவலகம் பகுதியில் இயங்கிவரும் மத்திய அரசு சாலை விரிவாக்கப் பணி திட்ட உதவி பொறியாளர் கொடிக் களம் பாலம் விரிவாக்க பணி நடைபெற்ற இடத்திற்க்கு ஆய்வுக்கு வந்த அவரை சந்தித்து கேட்டபோது, இதோ முடிந்து விடும் அதோ முடிந்துவிடும் என்றபடியே நின்றுகூட பதில் கூறாமல் அவசரம் அவசரமாக புறப்பட்டு சென்றார். 2019 டிசம்பருக்குள் முடிக்கவேண்டிய இந்த சாலை விரிவாக்க பணி 2020 பிறந்து ஆறு மாதங்கள் கடந்தும் பணிகள் முடிக்கப்படவில்லை. இன்னும் எத்தனை மாதங்கள் அல்லது ஆண்டுகள் ஆகுமோ இந்த பணிகள் முடிய என்று  வேதனையோடு கூறுகிறார்கள் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள்.

 

சார்ந்த செய்திகள்