Published on 27/07/2019 | Edited on 27/07/2019
சேலம் இரும்பாலையை தனியார்மயமாக்கும் மத்திய அரசின் முடிவை எதிர்த்து வரும் 29 ஆம் தேதி சேலத்தில் காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
![salem steel plant](http://image.nakkheeran.in/cdn/farfuture/WRCZVMv1wl7Aplysc36OUPRG6Mbx4pIKj-IFBM6IW7w/1564228919/sites/default/files/inline-images/ateeel2_0.jpg)
சேலம் உருக்காலை நஷ்டத்தில் இயங்குவதற்கு இந்திய உருக்கு ஆணைய நிர்வாகமே காரணம் எனக்கூறிய கே.எஸ்.அழகிரி இந்த போராட்டத்தினை அறிவித்துள்ளார்.
தனியார்மயம் குறித்த அறிவிப்பு வெளியான மறுநாளே (ஜூலை 5) சேலம் உருக்காலையில் உள்ள நிரந்தர தொழிலாளர்கள் 950 பேரும் காலை 6 மணி முதல் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு, தொழிலாளர்கள் குடும்பத்துடனும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் வரும் 29 ஆம் தேதி போராட்டத்தை முன்னெடுக்க இருக்கிறது காங்கிரஸ்.