விழுப்புரம் அனந்தபுரம் அருகிலுள்ள பனமலைப்பேட்டையில் உள்ள மலைக்கோயிலில் சுற்றி பார்ப்பதற்காக வந்த கல்லூரி மாணவர்கள், மலை கோயிலில் உள்ள குளத்தில் மீன்களுக்கு பொரி போட்டுக்கொண்டு இருக்கும்போது குளத்தில் உள்ள பாசியின் காரணமாக இரண்டு பேர் தவறி விழுந்துள்ளனர். இருவரையும் காப்பாற்ற சென்றவரும் தவறி விழுந்ததும் கூச்சலிட்டுள்ளார். அப்போது கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர்.
பொதுமக்களின் முயற்சியால் ஒருவர் காப்பாற்றப்பட்டடார். மற்ற இருவர்களும் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியைச் சேர்ந்த சுவேதா, சுந்தராஜ் ஆகியோர் என தெரிய வந்தது. பொதுமக்களால் மீட்கப்பட்டவர் அதே கல்லூரியில் படிக்கும் ஜெனிபர்.
தகவல் அறிந்து விரைந்து வந்த அனந்தபுரம் காவல்துறையினர் இறந்தவர் உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இச்சம்பம் குறித்து அனந்தபுரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் இருவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.